இயக்கம்

பொது அறிவு - இயக்கம் தொடர்பான வினா விடைகள்

1. நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவதே .................. ஆகும். - இயக்கம்

2. நேர்கோட்டு இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - மின்தூக்கியின் இயக்கம்

3. சுழற்சி இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம்

4. சீரலைவு இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - சுவர் கடிகார ஊசலின் இயக்கம்

5. பு மியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம் எத்தகைய இயக்கத்தைச் சார்ந்தது? - சீரலைவு இயக்கம்

6. மீன் தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம் ஒரு ................. - தன்னிச்சையான இயக்கம்

7. தரையில் உருளும் பந்து ..................... இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். - ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கம்

8. வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் ............. ஆகும். - தன்னிச்சையான இயக்கம்

9. துளைபோடும் இயந்திரம் எத்தகைய இயக்கத்தை சார்ந்தது? - ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கம்

10. வட்ட இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - கடிகார முள்முனையின் இயக்கம்

11. தானே விழும் பொருளின் இயக்கம் ஒரு ............. - நேர்கோட்டு இயக்கம்

12. குடை இராட்டினத்தின் இயக்கம் எவ்வகை இயக்கத்தை சார்ந்தது? - சுழற்சி இயக்கம்

13. சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம் ஒரு ................ - சீரலைவு இயக்கம்

14. தானே விழும் பொருளின் இயக்கம் எவ்வகை இயக்கத்தை சார்ந்தது? - நேர்க்கோட்டு இயக்கம்

15. ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம் எவ்வகை இயக்கத்தை சார்ந்தது? - சீரலைவு இயக்கம்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு