தென்னிந்திய வரலாறு



 சாளுக்கியர் மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 சாளுக்கியர் மரபு தோற்றி வித்தவர் - முதலாம் புலிகேசி
💠 கீழை சாளுக்கியர் தலைநகர் - வெங்கி
💠 மேலை சாளுக்கியர் தலைநகர் - கல்யாணி
💠 முதலாம் புலிகேசி தலைநகரம் - வாதாபி ( பாதாமி)
💠 சாளுக்கியர் மரபில் சிறந்த அரசர் - இரண்டாம் புலிகேசி
💠 இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்ட கங்க அரசன் - துர்விநீதன்
💠 துர்விநீதன் மகளை இரண்டாம் புலிகேசி மணமுடித்து கொண்டார்.
💠 இரண்டாம் புலிகேசி நர்மதை நதிகரை போரில் யாரை தோற்கடித்தார் - ஹர்சர்
💠 இரண்டாம் புலிகேசி யால் மணிமங்கலம் போரில் தோற்ற பல்லவ அரசன் - முதலாம் மகேந்திர வர்மன்
💠 இரண்டாம் புலிகேசி பல்லவ அரசன் முதலாம் நரசிம்ம வர்மனால் காஞ்சியில் தோற்கடிக்கப்பட்டார்
💠 இரண்டாம் புலிகேசி அவைக்கு வருகை புரிந்த சீனா பயணி - யுவான் சுவாங்
💠 இரண்டாம் புலிகேசி பின் ஆட்சிக்கு வந்தவர் - விக்ரமாதித்தன்
💠 சாளுக்கியர் மரபில் கடைசி அரசர் - இரண்டாம் கீர்த்திவர்மன்
💠 இரண்டாம் கீர்த்திவர்மன் முறியடித்தவர்கள் - இராஷ்டிர கூடங்கள்

 இராஷ்டிரகூட பற்றிய சில தகவல்கள்:-
💠 இராஷ்டிரகூட மரபை தோற்றுவித்தவர் - தந்தி துர்க்கர்
💠 தந்தி துர்க்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் கிருஷ்ணன்
💠 எல்லோராவில் கைலாசர் ஆலயத்தை அமைத்தவர் - முதலாம் கிருஷ்ணன்
💠இராஷ்டிரகூடர்களின் சிறந்த அரசர் - மூன்றாம் கோவிந்தன்
💠 மூன்றாம் கோவிந்தன் பின் ஆட்சிக்கு வந்தவர் - அமோகவர்ஷர்
💠 64 ஆண்டுகள் ஆட்சி செய்த இராஷ்டிரகூட மன்னர் - அமோகவர்ஷர்
💠 அமோகவர்ஷர் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 அமோகவர்ஷரின் சமய குரு - ஜீனசேனர்
💠 அமோகவர்ஷர் எழுதிய நூல் - கவிராஜ மார்க்கம்
💠 கவிராஜ மார்க்கம் எந்த மொழியில் எழுதப்பட்டது - கன்னடம்
💠 இராஷ்டிரகூடர் தலைநகரம் - மால்கெட்  (அல்லது) மான்யகேதம்
💠 அமோகவர்ஷர் பின் ஆட்சிக்கு வந்தவர் - மூன்றாம் கிருஷ்ணர்
💠இராஷ்டிரகூடர் மரபின் கடைசி அரசர் - மூன்றாம் கிருஷனராயர்

பல்லவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 பல்லவர்கள் தலைநகர் - காஞ்சிபுரம்
💠 பல்லவர்கள் துறைமுகம் - மாமல்லபுரம்
💠 பல்லவர்கள் சின்னம் - நந்தி (ம) சிங்கக்கொடி
💠 பல்லவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பிரிவுகள் - 3
💠 முதல் பல்லவ அரசில் குறிப்பிடத்தக்க அரசர் - பப்பதேவன், சிவஸ்கந்த வர்மன்
💠 முதல் பல்லவ அரசின் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
💠 இடைக்கால பல்லவ அரசின் குறிப்பிடத்தக்க அரசன் - விஷ்ணு கோபன்
💠 இடைக்கால பல்லவ அரசின் ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
💠 விஷ்ணு கோபனை சிறை வைத்த குப்த அரசன் - சமுத்திர குப்தர்
💠 பிற்கால பல்லவ மரபை தோற்றுவித்தவர் - சிம்மவிஷ்ணு
💠 பிற்கால பல்லவர்கள் ஆட்சி மொழி - தமிழ்
💠 சிம்மவிஷ்ணு மகன் - முதலாம் மகேந்திரவர்மன்
💠 முதலாம் மகேந்திரவர்மன் முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 முதலாம் மகேந்திரவர்மன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் - அப்பர் (எ) திருநாவுக்கரசர்
💠 முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்த சாளுக்கிய அரசன் - இரண்டாம் புலிகேசி
💠 முதலாம் மகேந்திரவர்மனால் தோற்கடிக்கப்பட்ட கங்கநாட்டு அரசன் - துர்வநீதன்
💠 முதலாம் மகேந்திரவர்மன் பட்டப்பெயர்கள்:
* போர் திறமைக்காக - கலகப்பிரியன், சத்ருமல்லன்
* கலை சிறப்பிற்காக - சித்திரகார புலி, விசித்திர சித்தன்
* தாராள குணத்திற்கு - குணபரன்
* இலக்கியத்திற்கு - மத்தவிலாசன்
* இசை ஆர்வத்திற்கு - சங்கீரண ஜதி
💠 முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய வடமொழி நூல் - மத்தவிலாச பிரகாசனம், தமிழ் நூல் - பாகவத அஜிக்கியம்
💠 முதலாம் மகேந்திரவர்மன் அமைந்த ஏரி - மாமண்டூர், மகேந்திர வாடி
💠 முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மவர்மன்
💠 முதலாம் நரசிம்மவர்மன் படைத் தளபதி - பரஞ்சோதி
💠 முதலாம் நரசிம்மவர்மனால் தோற்கடிக்கபட்ட சாளுக்கிய அரசர் - இரண்டாம் புலிகேசி
💠 முதலாம் நரசிம்மவர்மன் பட்டப்பெயர்கள் - மாமல்லன், வாதாபி கொண்டான், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்திய வித்தயாதரன்
💠 முதலாம் நரசிம்மவர்மன் இலங்கை நண்பன் - மானவர்மன்
💠முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் வந்த சீனா பயணி - யுவான் சுவாங்
💠 முதலாம் நரசிம்மவர்மன் மகன் - இரண்டாம் மகேந்திரவர்மன்
💠 இரண்டாம் நரசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் - இராஜசிம்மன்
💠 காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர் - இரண்டாம் நரசிம்மன்
💠 காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்
💠 பல்லவர்கள் கடைசி அரசர் - அபாரஜித பல்லவர்
💠 அபாரஜித பல்லவனை தோற்கடித்த சோழ அரசன் - ஆதித்த சோழன்

 சங்க காலம் மரபு பற்றி சில தகவல்கள்:-

🎯 தமிழகத்தில் பொற்காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்
🎯 சங்க காலத்தில் காலம் - கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு
🎯 சங்கம் என்ற சொல்லுக்கு பொருள் - கழகம்
🎯 சங்க காலத்தில் இயற்றிய நூல் - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
🎯 சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டது - பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
🎯 சங்க காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் - சேரர், சோழர், பாண்டியர்

💠சேரர்:
🎯 சேரர் தலைநகரம் - வஞ்சி
🎯 சேரர் துறைமுகம் - தொண்டி
🎯  சேரர் சின்னம் - வில் அம்பு
🎯 சேரர் சிறந்த அரசர் - சேரன் செங்குட்டுவன்
🎯 சேரர் அடையாள பூ - பனா பூ
🎯 சேரர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - வானவர், வில்லவர், மலையர்
🎯சேரர்களின் மரபுகள் -2 (1. உதயன் சேரலாதன் மரபு, 2. இரும்பொறை மரபு)
🎯 சேரன் செங்குட்டுவன் இளவல் - இளங்கோவடிகள்
🎯 சேரர் தற்கால பகுதி - கேரளா
🎯 இமயம் வரை படையெத்த சேர மன்னன் - சேர செங்குட்டுவன்

💠சோழர்:-

🎯 சோழர் தலைநகரம் - புகார்
🎯 சோழர் துறைமுகம் -
 காவிரிபூம்பட்டினம்  (பூம்புகார்)
🎯 சோழர் சின்னம் - புலி
🎯 சோழர் அடையாள பூ - ஆத்தி பூ
🎯 சோழர் சிறந்த அரசர் - கரிகாலன் சோழன்
🎯 சோழர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - கிள்ளி, வளவன், சென்னி
🎯 கரிகாலன் சோழன்  பற்றி கூறும் நூல் - பட்டினப் பாலை, பொருநராற்றுப்படை
🎯 கரிகாலன் சோழன் அவைப்புலவர் - உரித்திரகண்ணனார்
🎯  கரிகாலன் சோழன்  இயற்பெயர் - திருமாவளவன்
🎯 கரிகாலன் சோழன்  பட்டப் பெயர் - ஏழிசை வல்லவன், நரை முடித்து சொல்லால் முறை செய்தவன்
🎯 கரிகாலன் சோழன்  கட்டிய அணை - கல்லணை
🎯 சோழர் ஆட்சி காலத்தில் இருந்த கடைசி அரசர் - கோச்செங்கணான்

💠பாண்டியர்:-

🎯 பாண்டியர் தலைநகரம் - மதுரை
🎯 பாண்டியர் துறைமுகம் - கொற்கை (தூத்துக்குடி)
🎯 பாண்டியர் சின்னம் - மீன்
🎯 பாண்டியர் அடையாள பூ - வேம்பு
🎯 பாண்டியர் சிறந்த அரசர் - தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்
🎯 பாண்டியர்கள் வேறு பெயர்கள் - மாறன், வழுதி, செழியன்
🎯 பல்யாக சாலை என்று போற்றப்படுபவர் - முதுகுடுமிப் பெருவழுதி
🎯 தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி கூறும் நூல் - மதுரை காஞ்சி
🎯 கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் - ஆரிய படைகடந்த நெடுஞ்செழிய பாண்டியன்

முதல் பாண்டிய பேரசு பற்றி சில தகவல்கள்:-

💠 முதல் பாண்டிய பேரரசு தோற்றுவித்தவர் - கடுங்கோன்
💠 களப்பிரர்களிடம் இருந்து தென்தமிழகத்தை மீட்டவர் - கடுங்கோன்
💠 கடுங்கோன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அவனி சூளாமணி
💠 மாறவர்மன் அவனி சூளாமணி பட்டப்பெயர் - சடையவர்மன், உண்மையின் தோழன்
💠 மாறவர்மன் அவனி சூளாமணி பின் ஆட்சிக்கு வந்தவர் - செழியன் சேந்தன்
💠 செழியன் சேந்தன் எவ்வாறு அழைக்கப்பட்டான் - வானவன்
💠செழியன் சேந்தன் பட்டப்பெயர் - செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்
💠 மலையடிக்குறிச்சியில் குகை கோயில் கட்டியவர் - செழியன் சேந்தன்
💠 செழியன் சேந்தன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அரிகேசரி
💠 மாறவர்மன் அரிகேசரி பட்டப்பெயர் - பராங்குசன், நெய்வேலி வென்ற நெடுமாறன்
💠 மாறவர்மன் அரிகேசரி முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 மாறவர்மன் அரிகேசரி யாருடைய அருளினால் சைவ சமயத்திற்கு மாறினார் - திருஞானசம்பந்தர்
💠 மாறவர்மன் அரிகேசரி சைவ சமயத்திற்கு மாறிய பின் வழங்கப்பட்ட பட்டப்பெயர் - கூண் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன்
💠 மாறவர்மன் அரிகேசரி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதை பற்றி கூறும் நூல் - பெரியபுராணம்
💠 மாறவர்மன் அரிகேசரி பின் ஆட்சிக்கு வந்தவர் - கோச்சடையான் இரணதீரன்
💠 கோச்சடையான் இரணதீரன் வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் - மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியன், மதுரை கருநாடகன்
💠 கோச்சடையான் இரணதீரன் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தவர் - சுந்தரமூர்த்தி நாயனார்
💠 முதல் பாண்டிய பேரரசின் கடைசி அரசர் - வீரபாண்டியன்
💠 பாண்டியர்கள் காலத்தில் கல்வி கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது - சாலைகள்

இரண்டாம் பாண்டிய பேரரசு பற்றிய சில தகவல்கள் :-
💠 இரண்டாம் பாண்டிய பேரரசின் தலைநகரம் - மதுரை
💠 இரண்டாம் பாண்டிய அரசின் முதல் அரசர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்
💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் யாருடைய மகன் - விக்ரமன்
💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் எந்த சோழ மன்னனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார் - மூன்றாம் குலோத்துங்கன்
💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பட்டப்பெயர் - ராஜகம்பீரர்
💠 சதுர்வேதி மங்கலத்தில் 1030 பிரம்ம தேயங்கள் அமைத்தவர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்
💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர் -
* கலியுகராமன்
* அதிசய பாண்டிய தேவர்
* சோனாடு கொண்டான்
💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன்
💠 இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்த சோழ அரசன் - மூன்றாம் இராஜேந்திரன்
💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர்
* திரிபுவன சக்கரவர்த்தி
* எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன்
* பொன்வேய்ந்த பெருமாள்
💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பட்டப்பெயர் - கொல்லம் கொண்ட பாண்டியன்
💠 இலங்கைக்கு சென்று புத்தர் பல்லை எடுத்து வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠 நெல்லையப்பர் கோயில் சுற்றுசுவர் கட்டியவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொங்கு நாட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - சுந்தர பாண்டியன்
💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் செங்கல்பட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - விக்கிரம பாண்டியன்
💠 சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன் பகையை தீர்த்து வைத்தவர் - மாலிக்காபூர்
💠 பாண்டியர் காலத்தில் நாணயத்தில் பொறிக்கப்பட்ட உருவம் - மீன்
💠 தமிழ் கூடல் என்று அழைக்கப்படும் நகரம் - மதுரை

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு